ஐ.நா. மேடையில் மேற்கு நாடுகளை கடுமையாக விமர்சித்த நெதன்யாகு

27 புரட்டாசி 2025 சனி 09:21 | பார்வைகள் : 230
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்த மேற்கு நாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
ஐ.நா. பொதுச் சபைக்குப் புறப்படுவதற்கு முன் பேசிய நெதன்யாகு,
“கொலையாளிகள், பாலியல் வன்புணர்வாளர்கள் மற்றும் குழந்தைகளைக் கொளுத்துபவர்களைக் கண்டிக்காமல், அவர்களுக்கு இஸ்ரேல் நிலத்தின் மத்தியில் ஒரு நாட்டைக் கொடுக்க விரும்பும் தலைவர்களை நான் கண்டிப்பேன். இது நடக்காது என்று ஆவேசமாகக் கூறினார்.
ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல மேற்கு நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக நெதன்யாகு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பயங்கரவாதத்திற்கு ஒரு பெரிய வெகுமதி அளிப்பதைப் போன்றது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.
ஜோர்டான் நதியின் மேற்குப் பகுதியில் ஒரு பாலஸ்தீன அரசு ஒருபோதும் நிறுவப்படாது என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் மேற்குக் கரையில் குடியேற்றங்களை அதிகரிப்பது போன்றவற்றால் இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஐ.நா. மேடையில் நெதன்யாகுவின் இந்தக் கருத்துக்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
அதேவேளை நெதன்யாகு உரையாற்றத் தொடங்கியபோது பல நாடுகளின் பிரதிநிதிகள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நெதன்யாகுவின் இந்த உரை, பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான இரண்டு-அரசு தீர்வை ஊக்குவிக்க முற்படும் சர்வதேச சமூகத்திற்கும், பாலஸ்தீன அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் இடையிலான பிளவை மேலும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1