ரொனால்டோவின் இமாலய சாதனையை சுக்குநூறாக நொறுக்கிய இங்கிலாந்து ஜாம்பவான்

27 புரட்டாசி 2025 சனி 11:59 | பார்வைகள் : 115
பாயெர்ன் முனிச் அணிக்காக அதிவேகமாக 100 கோல்கள் அடித்து ஹாரி கேன் (Harry Kane) இமாலய சாதனை படைத்தார்.
பண்டஸ்லிகா போட்டியில் பாயெர்ன் முனிச் (Bayern Munich) 4-0 என்ற கோல் கணக்கில் வெர்டெர் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் பாயெர்ன் நட்சத்திர வீரர் ஹாரி கேன் (இங்கிலாந்து) 45 (P) மற்றும் 65வது நிமிடங்களில் கோல்கள் அடித்தார்.
இதன்மூலம் பாயெர்ன் முனிச் அணிக்காக அதிவேக 100 கோல்களை கடந்தார். 104 போட்டிகளில் 100 கோல்கள் அடித்ததன் மூலம், ஒரு கிளப்பிற்காக அதிவேகமாக இந்த இலக்கை எட்டிய ரொனால்டோவின் (105 போட்டிகள்) சாதனையை முறியடித்தார்.
மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்டும் (Erling Haaland) 105 போட்டிகளில் 100 கோல்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1