Paristamil Navigation Paristamil advert login

உடல் எடை குறைக்க சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

உடல் எடை குறைக்க சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

4 மார்கழி 2020 வெள்ளி 14:06 | பார்வைகள் : 8447


 சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும்.

 

வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.
 
ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊறவைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
 
கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
 
சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
 
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
 
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்