Paristamil Navigation Paristamil advert login

காசாவில் ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள் பலி

காசாவில் ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள் பலி

27 புரட்டாசி 2025 சனி 15:23 | பார்வைகள் : 169


காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில்  வெள்ளிக்கிழமை 26 சுமார் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 16ஆம் திகதி தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.


அல்-வேஹ்தா தெரு, ஷாதி முகாம் மற்றும் நாசர் சுற்றுப்புறம் உள்ளிட்ட இடங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வெவ்வேறு தளங்கள் மற்றும் இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகி வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்த குண்டுவீச்சு தாக்குதலுக்கு மத்தியில், "ஒவ்வொரு எட்டு அல்லது ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வான்வழித் தாக்குதலை" நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.


இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன், சர்ச்சைக்குரிய இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் தளங்களிலிருந்து உதவி பெற முயன்றபோது வெள்ளிக்கிழமை பலர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்