Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி

27 புரட்டாசி 2025 சனி 16:23 | பார்வைகள் : 174


பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின்  பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, பிரான்ஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.  

இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன்போது, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்