இலங்கையில் பெண் ஒருவர் கொடூர கொலை

27 புரட்டாசி 2025 சனி 17:40 | பார்வைகள் : 151
வெலிக்கடை - அங்கொடை பகுதியில் நேற்று பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்டவர் அங்கொடை , அக்கொன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான பெண் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர் வீட்டில் வசிக்கும் நபரும், கொலைசெய்யப்பட்ட பெண்ணும் ஒரே நிறுவனத்தில் பணியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து எதிர் வீட்டில் வசிக்கும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1