Paristamil Navigation Paristamil advert login

பேரழிவைத் தடுத்த ட்ரம்ப் - நன்றி தெரிவித்த பாகிஸ்தான்

பேரழிவைத் தடுத்த ட்ரம்ப் - நன்றி தெரிவித்த பாகிஸ்தான்

28 புரட்டாசி 2025 ஞாயிறு 08:54 | பார்வைகள் : 196


டொனால்ட் ட்ரம்ப் சரியான நேரத்தில் தலையிடாமல் இருந்திருந்தால், ஒபரேஷன் சிந்தூர் போர் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் (Shehbaz Sharif) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது அமர்வின், பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் காட்டிய தீவிர பங்களிப்பிற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

உலகில் அமைதியை மேம்படுத்துவதில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அற்புதமான மற்றும் அவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒபரேஷன் சிந்தூர் தாக்குதல், இரண்டு நாட்டு இராணுவ அதிகாரிகளின் நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே, போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும், இதில் மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை எனவும் இந்தியா தொடர்ந்தும் மறுத்து வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்