லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணமாகும் - ஜனாதிபதி மக்ரோன்!!
2 கார்த்திகை 2025 ஞாயிறு 17:23 | பார்வைகள் : 545
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், மூன்று நாட்கள் அரச சுற்றுப்பயணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நவம்பர் 5 ஆம் திகதி மற்றும் 6 ஆம் திகதிகளில் பிரேஸில் நாட்டுக்கும், 7 ஆம் திகதி மெக்ஸிக்கோவுக்கும் பயணிக்க உள்ளார். அங்கு வைத்து அரசியல் தலைவர்களைச் சந்தித்து, அரசியல் ரீதியான மிக இறுக்கமான நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாட உள்ளனர்.
பிரேஸிலில் COP30 (ஐநா காலநிலை மாநாடு) வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், மூன்று நாட்கள் முன்பாக அவரது பயணம் அமைய உள்ளது.
பிரேஸிலில் உள்ள Salvador de Bahia எனும் சிறிய நகருக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். அத்தோடு மேலும் பல பகுதிகளுக்கும் செல்ல உள்ளார்.
பிரேஸிலை அடுத்து மெக்ஸிக்கோவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள மக்ரோன், அங்கு ஒரு வருடத்துக்கு முன்னர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட க்ளாடியா செய்ன்பாம் (Claudia Sheinbaum) இனை சந்தித்து உரையாட உள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan