Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் தங்கம் வென்ற பிரஞ்சு வீரர் 101 வயதில் காலமானார்!!

ஒலிம்பிக் தங்கம் வென்ற பிரஞ்சு வீரர் 101 வயதில் காலமானார்!!

2 கார்த்திகை 2025 ஞாயிறு 21:16 | பார்வைகள் : 515


1948 லண்டன் ஒலிம்பிக்கில் சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற பிரான்ஸ் வீரர் சார்ல்ஸ் கோஸ்ட் (Charles Coste), 2024 பரிஸ் ஒலிம்பிக்கில் தீபத்தை ஏந்திய கடைசிக்கு முன் வீரராக இருந்தார். இவர் அக்டோபர் 30 அன்று, 101 வயதில் மரணமடைந்துள்ளார்.

1924ல் பிறந்த சார்ல்ஸ் கோஸ்ட், உலகில் உயிருடன் இருந்த மூத்த ஒலிம்பிக் சாம்பியனாகக் கருதப்பட்டார். அவர் தனது அணியுடன் 1948ல் இத்தாலிய வீரர்களை வென்று தங்கம் பெற்றார். பின்னர் பெஜோ அணிக்காக சாலை சைக்கிள் வீரராக விளையாடி, டூர் து பிரான்ஸ் மற்றும் ஜிரோ து இத்தாலியா போன்ற போட்டிகளில் பங்கேற்றார்.

1959ல் ஓய்வு பெற்ற அவர், நீண்ட காலம் மறக்கப்பட்டார். 2022ல் டோனி எஸ்டாங்கே (Tony Estanguet) என்பவரிடம் இருந்து லெஜியன் ஆப் ஹானர் விருதைப் பெற்றார்.

பரிஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழாவில் மழையில் தனது சக்கர நாற்காலியில் தீபத்தை ஏந்திய அவரது தோற்றம் உலகம் முழுவதும் மக்களை நெகிழச்செய்தது. "இந்த ஒலிம்பிக் விளையாட்டுகள் ஒரு புதிய காலத்தை ஆரம்பித்துள்ளன. பிரான்ஸ் அதன் அழகை வெளிப்படுத்த தொடங்கியதாக" அவர் கூறியிருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்