செங்கோட்டையன் எடுத்த திடீர் முடிவு. அதிமுகவில் அடுத்த பரபரப்பு.!
3 கார்த்திகை 2025 திங்கள் 09:55 | பார்வைகள் : 196
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்கள் அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் செங்கோட்டையன் பத்து நாட்களில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணை வேண்டும் என இபிஎஸ்-க்கு கெடு விதித்ததால் அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு செங்கோட்டையன் சற்று மௌனம் காத்து வந்த நிலையில் சமீபத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்திருந்தார்.
இதனால் செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து செங்கோட்டையன் என்று நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளார். நோட்டீஸ் கூட வழங்காமல் கட்சி விதிகளை மீறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். ஆனால் கட்சி விதிகளின் அடிப்படையில் தான் நீக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று இரவு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த செங்கோட்டையன் இன்று வழக்கு தொடர உள்ளார். இது EPS-க்கு பெரும் சிக்கலாக அமையும் என தெரிகிறது.

























Bons Plans
Annuaire
Scan