நகர்ந்து படிப்படியாக செல்லும் ஆஸ்திரேலியா.... விஞ்ஞானிகள் அதிர்ச்சி
3 கார்த்திகை 2025 திங்கள் 10:09 | பார்வைகள் : 411
ஆஸ்திரேலியா (Australia) அதன் எல்லைக் கோட்டிலிருந்து படிப்படியாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய ஆய்வுகளுக்கு அமைய, மணிக்கு சுமார் 7 சென்டிமீட்டர் வேகத்தில் வடக்குப் பகுதியை நோக்கி ஆஸ்திரேலியா நகர்ந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது எதிர்காலத்தில் ஒரு பெரிய நிலவியல் மோதலுக்கு வழிவகுக்கும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவிலிருந்து பிரிந்த ஆஸ்திரேலியா, இப்போது உலகின் அதிவேகமாக நகரும் கண்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த நகர்வு மெதுவாக இருந்தாலும், ஜி.பி.எஸ். (GPS) போன்ற துல்லியமான டிஜிட்டல் அமைப்புகளால் இந்த மாற்றம் உணரப்பட்டுள்ளது.
2016இல், கண்டம் நகர்ந்ததால் ஆஸ்திரேலியாவின் சரியான இருப்பிடம் சுமார் 2 மீட்டர் பிழையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
ஆஸ்திரேலியா தனது முழு தேசிய ஜி.பி.எஸ். (GPS) கிரிட் அமைப்பையும் அவசரமாகப் புதுப்பிக்க வேண்டியிருந்தது.
இந்தக் கண்ட நகர்வால் ஆஸ்திரேலியாவின் தனித்துவமான உயிரினங்களான கங்காரு, கோலா போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, ஆசிய நிலப்பரப்புடன் இணையும்போது, ஆசியப் பாலூட்டிகள் உள்நுழைவதால், உள்ளூர் இனங்கள் அழிவைச் சந்திக்கக்கூடும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, 300 மில்லியன் ஆண்டுகளின் பின்னர் ஆஸ்திரேலியா, வட அமெரிக்காவுடன் இணைந்து அடுத்த பேரரயக் கண்டம் (Supercontinent) உருவாகும் எனப் புவியியலாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த நில மாற்றத்திற்கு “அமாசியா” (Amasia) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் உலகின் காலநிலை முற்றிலும் மாறிவிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan