உலகின் அழகான ஏழு ரயில் நிலையங்களில் இரண்டு பிரெஞ்சு நிலையங்கள்!!
                    3 கார்த்திகை 2025 திங்கள் 21:19 | பார்வைகள் : 1349
பிரி வெர்செய் (Prix Versailles) என்ற யுனெஸ்கோ ஆதரவு பெற்ற உலகளாவிய கட்டிடக்கலை விருதில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் அழகான ஏழு ரயில் நிலையங்களில் பிரான்சின் செயிண்ட்-டெனிஸ் ப்லேயெல் (Saint-Denis Pleyel) மற்றும் வில்ஜூஃப்-குஸ்டாவ் ரூஸி (Villejuif–Gustave Roussy) ஆகிய இரு நிலையங்கள் தேர்வாகியுள்ளன.
இவை முறையே ஜப்பானிய கட்டிடக் கலைஞர் கென்கோ குமா (Kengo Kuma) மற்றும் பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் டொமினிக் பெரோ (Dominique Perrault) வடிவமைத்தவை. இதோடு ஆஸ்திரேலியாவின் சிட்னி, பெல்ஜியத்தின் மோன்ஸ், சீனாவின் குவாங்சௌ மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள நிலையங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
2015 இல் தொடங்கப்பட்ட இந்த விருது, “நிலைத்த வளர்ச்சிக்கான கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை” வலியுறுத்துகிறது. இது ஆண்டுதோறும் அருங்காட்சியகங்கள், ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், விமான நிலையங்கள் போன்ற எட்டு பிரிவுகளில் சிறந்த கட்டிடங்களை கௌரவிக்கிறது.
சர்வதேச நடுவர் குழு ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்யும், மேலும் பரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் விருதுகள் வழங்கப்படும்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan