தமிழர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! - ஒருவர் பலி!!
                    4 கார்த்திகை 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1522
தமிழர்கள் செறிந்துவாழும் Bobigny (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Avenue Karl-Marx வீதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2.15 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் அழைக்கப்பட்டபோது, நபர் ஒருவர் இரத்தவெள்ளத்தில் நினைவின்றி கிடப்பதை பார்த்துள்ளனர். அருகே துப்பாக்கிச்சன்னங்களும் கிடந்துள்ளன.
அவரை உடனடியாக மீட்ட காவல்துறையினர் Créteil (Val-de-Marne) நகரில் உள்ள Henri-Mondor மருத்துவமனையில் மீட்டனர். ஆனால் சிகிச்ச்சை பலனின்றி அவர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டுமணிநேரங்களுக்கு முன்னர், இதே 93 ஆம் மாவட்டத்தின் Avenue Léon-Blum பகுதியில் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan