ரோமில் திடீரென இடிந்து விழுந்த கோபுரம்- ஒருவர் உயிரிழப்பு
                    4 கார்த்திகை 2025 செவ்வாய் 09:25 | பார்வைகள் : 257
ரோமின் கொலோசியம் அருகே திங்கட்கிழமை 03.11.2025 ஒரு கோபுரம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.
29 மீட்டர் (95 அடி) உயரமுள்ள கோபுரத்தின் சில பகுதிகள் இரண்டு சந்தர்ப்பங்களில் தரையில் மோதிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒரு ருமேனிய தொழிலாளி உயிரிழந்துள்ளதாக ரோம் ஊடகங்கள் தெரிவித்தன.
திங்கட்கிழமை இரவு அவசர சேவைகளால் அந்த நபர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரோம் காவல்துறைத் தலைவர் லம்பேர்டோ கியானினி முன்பு தெரிவித்திருந்தார்.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மூன்று பேரில் மற்றொரு தொழிலாளி ஸ்ட்ரோயிசி ஒரு ருமேனிய நாட்டவர் என்றும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ரோமானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ரோம் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan