Paristamil Navigation Paristamil advert login

சுகாதார போக்குவரத்து மோசடி - 5 ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில்

சுகாதார போக்குவரத்து மோசடி - 5  ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில்

4 கார்த்திகை 2025 செவ்வாய் 09:53 | பார்வைகள் : 598


முக்கிய விவரங்கள்:

திகதி: நவம்பர் 4, 2025

இடம்: Évry திருத்த நீதிமன்றம் (tribunal correctionnel - Essonne)

குற்றச்சாட்டு: சுகாதார போக்குவரத்து மோசடி

தொகை: 612,000 யூரோ

மோசடி முறை:

நவம்பர் 4, 2025 அன்று Évry திருத்த நீதிமன்றத்தில் ஐந்து கட்டண வாகன(Taxi) ஓட்டுநர்கள் நீண்டகால நோயாளியொருவருடன் இணைந்து Assurance-maladie-இடமிருந்து 612,000 யூரோக்களை போலிச் சுகாதாரப் போக்குவரத்துச் சீட்டுகள் மூலம் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். இந்த மோசடி 8 ஆண்டுகளாக நீடித்துள்ளது. இதில் 35 வயது நீண்டகால நோயாளி கட்டண வாகன ஓட்டுநர்களுக்கு வெற்றுச் சீட்டுகளை வழங்க, அவர்கள் இல்லாத பயணங்களைப் கட்டணச் சீட்டுக்கள் தயார் செய்து, தேசிய மருத்துவக் காப்பீடானCPAM-இடமிருந்து பணம் வசூலித்துள்ளனர்.காவல் துறையின் விசாரணையில் 3,024 போலி மருத்துவ பரிந்துரைகள் கண்டறியப்பட்டன,

புள்ளிவிவரங்கள்:

3,024 போலி மருத்துவ பரிந்துரைகள்

208,800 யூரோ மோசடி முயற்சி

7,142 யூரோக்கள் கையகப்படுத்தப்பட்டன

கைபற்றப்பட்ட சொத்துகள்:

6,600 யூரோக்கள் பணம்

ஒரு உந்துருளி மற்றும் ஒரு மகிழுந்து

3 Taxi உரிமங்கள்

குற்றத்தில் ஈடுபாடு:

5 கட்டண வாகன ஓட்டுநர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். . ஒரு ஓட்டுநர் 750 போலிப் பயணங்களும், மற்றொருவர் 550 பயணங்களும்,  (போலிப் பயணங்கள்)  செய்ததாக மருத்துவக் காப்பீட்டிடம் கணக்குக் காட்டி உள்ளனர்.

இவரகளின் குற்றங்களிற்கான தீர்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்