Paristamil Navigation Paristamil advert login

சமூகவலைத்தளங்களுக்கு தடை! - ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு??!!

சமூகவலைத்தளங்களுக்கு தடை! - ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு??!!

4 கார்த்திகை 2025 செவ்வாய் 17:29 | பார்வைகள் : 997


சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை கொண்டுவடப்படுவது தொடர்பில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இன்று நவம்பர் 4, செவ்வாய்க்கிழமை La Rochelle (Charente-Maritime) நகரில் இடம்பெறும் கடல் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மக்ரோன் பயணித்துள்ளார்.  அங்கிருந்து திரும்பியதும் அவர் சமூகவலைத்தள தடை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்கு சமூகவலைத்தளங்களை தடை விதிப்பதும், சில தளங்களுக்கு கட்டுப்பாடும் விதிப்பது தொடர்பில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவர்களின் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாகவும், அவர்களது உளநலம் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாகவும் எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்