பீஹாரில் 121 சட்டசபை தொகுதிகளுக்கு... நாளை தேர்தல்; ஓட்டுப்பதிவு சுமுகமாக நடக்க பலத்த பாதுகாப்பு
5 கார்த்திகை 2025 புதன் 08:11 | பார்வைகள் : 130
பீஹார் மாநிலத்திற்கான முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் வன்முறையை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு நடக்கிறது. மொத்தம், 243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி கடந்த சில தினங்களாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மாநிலம் முழுதும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் நடந்தன.
வாக்குறுதிகள் இதில் ஆட்சியை தக்க வைக்க ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான நட்டா ஆகியோர் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியின் 'மஹாகட்பந்தன்' கூட்டணி சார்பில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல், அவரது சகோதரி பிரியங்கா, முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ஆகியோர், வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மறுபுறம் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் 824 பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்தது.
இதுவரை 10 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
பிரசாரம் ஓய்ந்தது முதல் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5:00 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணிக்கு முடிவடையும்.
ஓட்டுப்பதிவு சுமுகமாக நடக்கும் வகையில், தேர்தல் கமிஷன் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பதற்றமானவையாக கண்டறியப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்கட்ட தேர்தலில் பீஹார் துணை முதல்வரும் பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சாம்ராட் சவுத்ரி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உட்பட மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan