பயங்கரவாத தாக்குதலின் நினைவுச் சின்னம்! - இடமாற்றம்!!
5 கார்த்திகை 2025 புதன் 10:00 | பார்வைகள் : 385
பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுச்சின்னம் பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் அமைக்கப்பட உள்ளது.
முதலில் Suresnes (Hauts-de-Seine) நகரில் உள்ள Mont Valérien இல் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு பரிசுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் இடம்பெற்ற தாக்குதல் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. அவர்களை நினைவுகூறும் விதத்தில் 3,000 சதுர மீற்றர் பரப்பளவில் இந்த நினைவுச் சின்னம், கொல்லப்பட்ட அனைவரது நாமங்களையும் தாங்கி அமைக்கப்பட உள்ளது.
2027 ஆம் ஆண்டு அது திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று காலை பரிஸ் மற்றும் புறநகர் பரிசின் ஐந்து இடங்களில் ஆறு தாக்குதல்களை பயங்கரவாதிகள் மேற்கொண்டிருந்தனர். இதில் 130 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டும் இருந்தனர். அத்தோடு 416 பேர் காயமடைந்திருந்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan