Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீதான நம்பிக்கையை பரிசோதிக்கும் தேர்தல்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீதான நம்பிக்கையை பரிசோதிக்கும் தேர்தல்

5 கார்த்திகை 2025 புதன் 08:09 | பார்வைகள் : 225


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை பரிசோதிக்கும் களமாக  தேசிய தேர்தல் மாறியிருக்கிறது.

நியூயோர்க் சிட்டி உட்பட முக்கிய நகரங்களின் மேயர் பதவிக்கான தேர்தல்  நடைபெறுகிறது.

இத்தேர்தலில் நியூயோர்க் மேயர் பதவியுடன், நியூ ஜெர்ஸி மற்றும் வேர்ஜினியா ஆளுநர் பதவிகளும் மேலதிக கவனத்தைப் பெறுகின்றன.

நியூயோர்க் மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர் ஸோரான் மம்தானி ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவைவிட தெளிவான முன்னிலை வகிப்பதை கருத்துக்கணிப்புகள் வெளிக்காட்டுகின்றன.

இதனிடையே, சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஆண்ட்ரியூ கமோவும் இவ்விரு வேட்பாளர்களுக்கும் கடும் போட்டியாளர்களாகவுள்ளனர்.

தமது தேர்தல் வாக்குறுதிகளால் நியூயோர்க் வாக்காளர்களின் கவனம் ஈர்த்துள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஸோரான் மம்தானியின் குழந்தைகளுக்கான இலவச காப்பகம், இலவச பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை நிர்ணயத்தை ஒழுங்குப்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் கவனத்தை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.      

 

வர்த்தக‌ விளம்பரங்கள்