இளஞ்செழினின் கண்ணீருக்கு அரசாங்கம் காரணமல்ல என கூறிய அமைச்சர்
5 கார்த்திகை 2025 புதன் 13:58 | பார்வைகள் : 174
மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் மீது அரசாங்கத்திற்கு சிறந்த மதிப்பு உள்ளது என்றும், அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் அரசாங்கம் செயற்படவில்லை என்றும், அந்தத் துறையில் நிலவக்கூடிய பிரச்சினைகளை கருத்திற்கொண்டே அவருக்கு சேவை நீடிப்பை வழங்க முடியாது போயுள்ளது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்கு தான் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்த போதும், அதனை ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவில்லை என்று கண்ணீர் சிந்தியவாறு வெளிநாடொன்றில் நிகழ்வொன்றின் போது மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் மற்றும் அதேபோன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லபருக்கு பதவி உயர்வு வழங்காமை தொடர்பிலும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்தப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் குறிப்பிடும் இரண்டு நீதிபதிகள் தொடர்பிலும் சமூகத்தில் அவர்களின் சேவைகள் தொடர்பில் சிறந்த கௌரவம் உள்ளது. இவர்கள் போன்ற அரச அதிகாரிகள் பலர் இருக்கின்றனர். நீதித்துறையில் பதவி நீடிப்புகள் வழங்கும் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அந்தத் துறையில் தமது திறமைகள் மூலம் உயர்ந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். இது அவர்களுக்கு பதவி நீடிப்பு வழங்காமல் இருப்பதாக அல்ல. இதுவே சாதாரண முறையாகும். அந்த துறைகளில் வெற்றிடங்களை நிரப்ப முடியாத சிக்கல்கள் வந்தால் மட்டுமே சில நேரங்களில் பதவி நீடிப்புகள் வழங்கப்படலாம். எவ்வாறாயினும் அவர்களின் சேவைகளை நாங்கள் மதிக்கின்றோம் என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan