உடல் பருமன் கர்ப்பமடைவதை பாதிக்குமா?
7 சித்திரை 2020 செவ்வாய் 17:34 | பார்வைகள் : 9577
கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.
இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது