இசையால் பதிலடி கொடுத்த இளையராஜா...
6 கார்த்திகை 2025 வியாழன் 12:02 | பார்வைகள் : 191
1987-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரு பிரம்மாண்டமான படம் உருவாகியது. அந்த படத்தின் தயாரிப்பாளர், ஹீரோ, இயக்குனர், ஒளிப்பதிவாளர் என எல்லாருமே பெரிய பெரிய ஜாம்பவான்களாக வேலை செய்திருக்கிறார்கள். அது ஒரு 80ஸ் காலகட்டம் என்பதால் வழக்கம் போல் இசைஞானி இளையராஜா தான் அப்படத்திற்கு இசையமைக்கிறார். அந்த படத்துடைய படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிகை ஒன்று அதன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அங்கிருந்த படக்குழுவினரை பேட்டி எடுத்திருக்கிறார்கள். அந்த வார இதழில் அவர்கள் அப்படத்தைப் பற்றி எழுதுகிறார்கள்.
அது என்னவென்றால், இந்த படத்துடைய ரிச்னஸ், கலர், மேக்கிங் இதையெல்லாம் வச்சு பார்க்கும் போது இந்த படத்தில் இளையராஜா காணாமல் போய்விடுவார் என்று விமர்சித்து எழுதி இருக்கிறார்கள். ஒருவழியாக படமும் ரிலீஸ் ஆகிறது. படப்பிடிப்பின் போது பேட்டி எடுத்து இளையராஜாவை விமர்சித்து எழுதிய பத்திரிகையாளர்கள் படம் ரிலீஸ் ஆன பின்னர் அதன் ப்ரிவ்யூவை பார்த்துவிட்டு அந்த படத்துக்கான விமர்சனத்தில், படத்தின் டைட்டில் கார்டு வரும்போது மனதிற்குள் புகும் இளையராஜாவின் குரல், நீங்க நல்லவரா கெட்டவரா என கேட்கும் போது வரும் பின்னணி இசை வரை படம் முழுக்க ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறார் இளையராஜா என பாராட்டி எழுதி இருக்கிறார்கள்.
அந்த படம் வேறெதுவுமில்லை... நாயகன். அப்படத்தில் என்னதான் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, ஒளிப்பதிவு என பலவிதமான விஷயங்கள் பிரம்மாண்டமாக இருந்தாலும், அதற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது இளையராஜாவின் இசை. இப்ப வரைக்கும் தமிழ் சினிமாவில், அப்படி ஒரு படத்தை டைரக்ட் பண்ணிட மாட்டோமா என நினைக்காத டைரக்டர்களே இருக்க முடியாது. ஏனெனில் அந்த அளவுக்கு அந்த படம் சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இப்படி கோலிவுட்டின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றான நாயகன், கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அன்று இப்படத்தை தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தை மிஸ் பண்ணிய 90ஸ் மற்றும் 2கே கிட்ஸுகள் தற்போது தியேட்டரில் ஆவலோடு இப்படத்தை பார்த்து வருகின்றனர். புதுப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்குமோ அதே அளவு செம மாஸான வரவேற்பை நாயகன் திரைப்படம் பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan