Paristamil Navigation Paristamil advert login

விஜய்யின் ஜனநாயகன் படம் தள்ளிப் போகிறதா?

 விஜய்யின் ஜனநாயகன் படம் தள்ளிப் போகிறதா?

6 கார்த்திகை 2025 வியாழன் 13:02 | பார்வைகள் : 271


கரூர் நெரிசல் சம்பவத்தில் நடிகர் விஜய் விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில் ஜனநாயகன் படத்துடைய ரிலீஸ் தள்ளிப் போகலாம் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.நடிகர் விஜய்யின் சினிமா கெரியரில் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன்பின்னர் அவர் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இதனால் ஜனநாயகன் வெளியீடு தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது.இந்த நிலையில் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என கே.வி.என். நிறுவனம் மீண்டும் உறுதிபட அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்