Paristamil Navigation Paristamil advert login

Doctolib நிறுவனத்திற்கு 4.6 மில்லியன் யூரோக்கள் அபராதம்!!

Doctolib நிறுவனத்திற்கு 4.6 மில்லியன் யூரோக்கள் அபராதம்!!

6 கார்த்திகை 2025 வியாழன் 14:46 | பார்வைகள் : 666


மருத்துவ சந்திப்புக்களை எடுக்க உதவும் நிறுவனமான Doctolib, தனது ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக போட்டியாளர் ஆணையத்தால் 4.6 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

2019ஆம் ஆண்டு Cegedim Santé என்ற போட்டியாளர் அளித்த புகாருக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. Doctolib தனது சேவைகளைப் பயன்படுத்தும் மருத்துவர்களிடம் “பிரத்தியேக ஒப்பந்தங்கள்” விதித்து, போட்டியாளர்களை சந்தையிலிருந்து நீக்க முயன்றதாகவும், 2018ல் MonDocteur என்ற மற்றொரு நிறுவனத்தை வாங்கி சந்தையை முடக்கியதாகவும் ஆணையம் கண்டறிந்துள்ளது.

Doctolib தற்போது ஐரோப்பாவில் 80 மில்லியன் பயனாளர்கள் மற்றும் 400,000 தொழில்முறை மருத்துவர்கள் உடைய ஒரு பெரிய நிறுவனம் ஆகும். நிறுவனம் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த மேல்முறையீடு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. 2019இல் 10% மட்டுமே மருத்துவ  சேவையளித்த Doctolib, தற்போது 30% ஆக வளர்ந்துள்ளதாக கூறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்