ஓட்டு வங்கிக்காக ராமரை வெறுக்கின்றனர்; ராகுல், லாலு மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
7 கார்த்திகை 2025 வெள்ளி 11:21 | பார்வைகள் : 141
பீஹாரில், ஓட்டு வங்கிக்காக தான் ராகுலும், லாலு குடும்பத்தினரும் ராமரை வெறுக்கின்றனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நேற்று முடிந்தது.
இறுதி கட்ட தேர்தல் வரும் 11ம் தேதி நடக்க உள்ளது. 20 மாவட்டங்களில் உள்ள, 122 தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
அதிவிரைவு சாலை அதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பஹல்பூர் மற்றும் அராரியா மாவட்டங்களில் நேற்று அடுத்தடுத்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி பேசியதாவது:
பீஹாரில், 15 ஆண்டுகள் நடந்த காட்டாட்சியால் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. நெடுஞ்சாலை, பாலம், உயர்கல்வி நிறுவனங்கள் எதுவும் அமையவில்லை. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதை மாற்றியது. இன்று அதிவிரைவு சாலைகள், பாலங்கள், நான்கு மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.
மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் விரட்டியடிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் காங்கிரஸ்- - ராஷ்ட்ரீய ஜனதா தளம் அவர்களுக்கு பாதுகாப்பு தருகிறது. ஆட்சிக்கு வந்தால் அவர்களை பின்வாசல் வழியாக மாநிலத்திற்குள் நுழையவிடுவர். இது, நாட்டு மக்களுக்கே பாதிப்பு.
காங்கிரசில் குடும்ப பெயரை வைத்து அரசியலில் இருப்பவர்கள், சத் பூஜையை நாடகம் என்கின்றனர்.காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு தான் செல்வதில்லை என்றால், அங்கு உள்ள நிஷாத் ராஜ், சபரி மாதா, வால்மீகி சன்னிதிகளுக்கு கூட செல்வதில்லை. இது அவர்களிடம் இருக்கும் தலித், பிற்படுத்தப்பட்டோர் வெறுப்பை காட்டுகிறது.
சமூக நீதி ஓட்டு வங்கிக்காக ராகுலும், லாலு குடும்பத்தினரும் ராமரை வெறுக்கின்றனர். இந்த தேர்தலில் பீஹார் இளைஞர்கள், முதியோர், குறிப்பாக பெண்கள் உற்சாகமாக ஓட்டளிக்கின்றனர். ஒரு ஓட்டு சமூக நீதியை உருவாக்கியது; அதே ஓட்டு காட்டாட்சியை விரட்டியது. மீண்டும் காட்டாட்சி வராமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan