கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளில் சுமார் 200 பேர் பலி!
7 கார்த்திகை 2025 வெள்ளி 11:20 | பார்வைகள் : 195
பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயல் வியட்நாமில் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை சுமார் 5 பேர் உயிரிழந்ததாகவும் பிலிப்பைன்ஸில் பலியான 188 பேரையும் சேர்த்து, கல்மேகி புயல் சுமார் 200 பேரை காவு வாங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புயலின் பெரும் தாக்கத்தினால் மத்திய வியட்நாமில் நேற்று வியாழக்கிழமை (6) மண்சரிவு ஏற்பட்டதோடு, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நிறைய வீடுகள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்தனர்.

கல்மேகி புயலின் தாக்கத்தால் 7 பேர் காயமடைந்ததாகவும் சுமார் 2800 வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பசுபிக் கடலில் உருவான கல்மேகி புயல் கடந்த புதன்கிழமை (5) பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கடந்து, தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது.
இதில் மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள சில தீவுப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதுடன் கனமழை பெய்ததையடுத்து, நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு முதலிய மாகாணங்கள் வெள்ளக்காடாயின.
வீதியோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடற்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கொள்கலன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த புயல் இன்று வியட்நாமின் மத்திய பகுதியை நெருங்கி பெரிதளவில் சேதம் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை மத்திய வியட்நாம் வழியாக மணிக்கு 149 கி.மீ வேகத்தில் வீசிய கல்மேகி புயல், தற்போது மேற்கு நோக்கி கம்போடியா, லாவோஸை பகுதிகளில் நகர்கிறது.
நேற்று இரவு முழுவதும் வீசிய புயல் காற்று காரணமாக இன்று காலை வியட்நாமின் மத்திய கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் சேதமடைந்து, குப்பைகளால் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில், இன்று (7) இரவு மத்திய வியட்நாமை கல்மேகி புயல் கடுமையாக தாக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Annuaire
Scan