சபையில் உறங்கிய அர்ச்சுனா எம்.பி - வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விமர்சனம்!
7 கார்த்திகை 2025 வெள்ளி 15:20 | பார்வைகள் : 174
‘வடக்கு மாகாணத்திற்கு எந்த நிதியும் இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை’ என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த போது சபையில் அர்ச்சுனா எம்.பி உறக்கத்தில் இருந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.
இந்நிலையில், தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவொன்றினையிட்டு வரவு செலவுத் திட்டத்தை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது பதிவில், ‘ஜனாதிபதியின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக பார்த்தேன். வட மாகாணத்திற்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை ஐயாயிரம் மில்லியன் ரூபாய் வீதி அபிவிருத்திக்காகவும், 1500 மில்லியன் ரூபாய் வட்டு வாகல் பாலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்திற்கு 200 மில்லியன் ரூபாய் என்றார்கள். இங்கு இந்தத் தடவை எதுவுமே இல்லை.கடந்த தடவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட 9.3 மில்லியன் ரூபாய் கூட பாவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிற்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் ரூபாய் நிதியும் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள். திருப்பி கிடைக்கப்போவதுமில்லை என்றும் விமர்சித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan