"அவனிடம் காசே கிடையாது": றாப் பாடகருக்கு எம்பாப்பே கொடுத்த பதிலடி!!
7 கார்த்திகை 2025 வெள்ளி 16:07 | பார்வைகள் : 625
பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே மீது றாப் பாடகர் ஓரெல்சான் தனது புதிய பாடல் « La petite voix » இல் நையாண்டி செய்ததைத் தொடர்ந்து, எம்பாப்பே சமூக வலைதளத்தில் கடும் பதில் அளித்துள்ளார்.
ஓரெல்சான், எம்பாப்பே குடும்பம் வாங்கிய எஸ்.எம். கோன் கழகம் மோசமான நிலையில் உள்ளதை குறித்து « நீ உன் நகரத்தை எம்பாப்பே போல மூழ்கடிப்பாய் » என பாடியிருந்தார். இதற்கு எம்பாப்பே, « நீ மிகவும் நேசிக்கும் நகரத்தை காப்பாற்ற வரலாம் » என பதிலளித்ததுடன், ஓரெல்சான் கழகத்தில் இலவசமாக பங்கெடுக்க முயன்றதை “ 1% பங்குக்காக, ஒரு காசும் செலவிடாமல் சேர்த்துக்கொள்ள வேண்டி எங்களிடம் பிச்சை எடுத்தான், ஏனெனில் அவனிடம் காசே கிடையாது ஆனால் நார்மண்டி பகுதியைச் சேர்ந்த நல்ல பையனாகத் தோன்றவே விரும்பினான்” என விமர்சித்துள்ளார்.
பரிஸ்-சான்-ஜெர்மன் முன்னாள் நட்சத்திரமான எம்பாப்பே, 2024 இல் கான் அணியின் பெரும்பங்கு முதலீட்டாளராக ஆனார். ஆனால் கழகம் தற்போது பிரான்சின் மூன்றாம் நிலை லீக்கான நேஷனலுக்கு தாழ்த்தப்பட்டுள்ளது. மேலும், அவரது வருகைக்குப் பிறகு 16 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட சமூக மறுசீரமைப்பு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan