Paristamil Navigation Paristamil advert login

மாலியில் இருந்து பிரெஞ்சு மக்களை வெளியேற ஆணை!

மாலியில் இருந்து பிரெஞ்சு மக்களை வெளியேற ஆணை!

7 கார்த்திகை 2025 வெள்ளி 16:59 | பார்வைகள் : 615


மாலியில் பாதுகாப்பு நிலைமை 'மோசமடைந்துள்ளதால்" பிரான்ஸ் அங்குள்ள தனது குடிமக்களை தற்காலிகமாக வெளியேற பரிந்துரைத்துள்ளது.

முக்கிய பரிந்துரைகள்:

தலைநகர் பாமாகோ உட்பட மாலி முழுவதும் பாதுகாப்பு அபாயம் உள்ளது.
வணிக விமானங்கள் மூலம் விரைவாக வெளியேற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிலப்பாதை ஊடான பயணம் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பிரெஞ்சு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

பின்னணி:

JNIM  (அல்-காயிதா இணைப்பு) மற்றும் இஸ்லாமியதேசச பயங்னரவாதக் குழுக்கள்(ISIS)  தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன
எரிபொருள் இறக்குமதிக்கு தீவிரவாதிகள் தடை விதித்துள்ளனர்
2012 முதல் இடம்பெறும் பாதுகாப்பு நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளன.

 

பிரெஞ்சு தூதரகத் தகவல்கள்:

பிரெஞ்சு தூதரகம் திறந்த நிலையில் உள்ளது
4,300 பிரெஞ்சு குடிமக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
பாதுகாப்பு சேவைகள் தொடர்கின்றன

பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் 'மாலிக்கு எந்த காரணத்திற்காகவும் பயணம் செய்வது கடுமையாக தவிர்க்கப்பட வேண்டும்' எனவும் எச்சரித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்