Paristamil Navigation Paristamil advert login

ஐந்து நண்பர்களுக்கு - €250 மில்லியன் யூரோ அதிஷ்ட்டம்!!

ஐந்து நண்பர்களுக்கு - €250 மில்லியன் யூரோ அதிஷ்ட்டம்!!

7 கார்த்திகை 2025 வெள்ளி 18:53 | பார்வைகள் : 378


ஐந்து நண்பர்கள் இணைந்து யூரோமில்லியன் அதிஷ்ட்டலாபச் சீட்டில் €250 மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாத சீட்டிழுப்பில் இந்த அதிஷ்ட்டம் வெல்லப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட ஐந்து நண்பர்கள் இந்த தொகையை வென்று, ஆளுக்கு €50 மில்லியன் யூரோக்கள் வீதம் பகிர்ந்து எடுத்துள்ளனர்.  குறித்த ஐந்து நண்பர்களும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

"நாங்கள் என்றேனும் இத்தொகையை வெல்லுவோம் என நம்பியிருந்தோம்" என அவர்கள் தெரிவித்தனர்.

2004 ஆம் ஆண்டு யூரோமில்லியன் அதிஷ்ட்டலாபச் சீட்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை மூன்று தடவைகள் மாத்திரமே இதுபோன்ற அதிக தொகை வெல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு அதிஷ்ட்டசாலிகளாக இவர்கள் உள்ளதாக FDJ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்