அருந்தப்பில் SHEIN - கடும் கண்காணிப்பு!
8 கார்த்திகை 2025 சனி 12:03 | பார்வைகள் : 453
பிரெஞ்சு அரசாங்கத்தின வெள்ளிக்கிழமை அறிவிப்பின்படி SHEINஇணையதளம் இனி 'சட்டவிரோத பொருட்களை' நீக்க ஒத்துழைத்தமையால், அதற்கான தற்காலிகமாக தடை நீக்கப்பட்டுள்ளது, ஆனால் கடுமையான கண்காணிப்புத் தொடரும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முதற் தடைக்கு முன்வைக்கப்பட்ட காரணங்கள்
குழந்தைத் தோற்றமுள்ள பாலியல் பொம்மைகள்
A வகை ஆயுதங்கள்
தரத்திற்கு ஒவ்வாத பொருட்கள்
SHEINஇன் நடவடிக்கைகள்:
மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
துணி மற்றும் முக்கிய பொருட்கள் அல்லாத பொருட்களை நிறுத்தியுள்ளது.
அனைத்து பிரெஞ்சு சட்டங்களையும் பின்பற்றுவதாக உறுதியளித்துள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கைகள்:
சார்ள்-து-கோல் விமானநிலையத்தில் அனைத்து பொதிகளும் சோதனை செய்யப்படுவது தொடரும்.
இணையதளைத் தடுக்க நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலையீட்டிற்காக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால நடவடிக்கைகள்:
பிற விற்பனை இணையதளங்களுக்கு எதிராகவும் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நெருக்கமான, கடமையான கண்காணிப்புகள் தொடரும்
சட்டப் போராட்டங்கள் சில காலங்கள் எடுக்கக்கூடும்
இந்த முடிவு, SHEIN சட்டவிரோத பொருட்களை தனது தளத்தில் இருந்து அகற்றிய பின்னரே வந்துள்ளது, ஆனால் அரசாங்கம் தனது கண்காணிப்பைத் தொடரும். மீறப்பட்டால் நிரந்தரரத் தடை போடப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan