Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவில் Apple Trade In திட்டம்

இந்தியாவில் Apple Trade In திட்டம்

8 கார்த்திகை 2025 சனி 12:14 | பார்வைகள் : 137


Apple நிறுவனம் இந்தியாவில் Trade In திட்டத்தின் கீழ், பழைய iPhone மற்றும் Android போன்களை மாற்றி புதிய iPhone வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தள்ளுபடி வழங்குகிறது.

இந்த திட்டம் Apple Store-களிலும், Apple இணையதளத்திலும் கிடைக்கிறது.

பழைய iPhone-ஐ மாற்றும்போது, மொடல் மற்றும் அதன் நிலைமை அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.64,000 வரை தள்ளுபடி பெறலாம்.

உதாரணமாக, iPhone 16 Pro Max-க்கு ரூ.64,000 வரை, iPhone 7 Plus-க்கு ரூ.4,350 வரை பெறலாம். சாதனத்தில் சேதம் இருந்தால், மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது.

Trade In திட்டம் iPhone மட்டுமல்லாமல், Mac, iPad, Apple Watch மற்றும் Android போன்களுக்கும் பொருந்தும்.

Android சாதனங்களில் Samsung Galaxy S24 Ultra ரூ.41,540, Google Pixel 8 ரூ.19,000, OnePlus 12R ரூ.13,400 வரை மதிப்பீடு செய்யப்படுகிறது.

பழைய சாதனம் Trade In பட்டியலில் இல்லாவிட்டாலும், Apple அதை இலவசமாக மறுசுழற்சி செய்யும் சேவையும் வழங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், புதிய சாதனங்களை குறைந்த செலவில் பெறுவதற்கும் உதவுகிறது.

இந்த திட்டம், புதிய iPhone 17 மற்றும் iPhone Air வாங்க விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்