பரிஸ் : பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 3 இளம் பெண்கள் கைது!!
8 கார்த்திகை 2025 சனி 14:29 | பார்வைகள் : 473
பரிசில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட மூன்று இளம்பெண்கள் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 10 ஆம் திகதி அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக Parquet national antiterroriste (Pnat) அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். மூவரும் 20 வயதுகளையுடையவர்கள் எனவும், அவர்கள் பரிசில் உள்ள மதுபான விடுதி மற்றும் இசை நிகழ்ச்சி இடம்பெறும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மீதான மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் தடுப்புக்காவல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 13 தாக்குதல் இடம்பெற்று பத்து ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரான்சில் இன்னமும் பயங்கரவாத அச்சுறுதல் உள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan