அடுத்த வாரம் கோடை போல வெப்பம் எதிர்பார்ப்பு!!
8 கார்த்திகை 2025 சனி 16:49 | பார்வைகள் : 464
அடுத்த வாரத்தின் நடுப்பகுதியில் பிரான்சில் அசாதாரணமான வெப்பநிலை அதிகரிப்பு ஏற்படும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் குறிப்பாக தென் மேற்கு பிராந்தியங்களில் 25°C-ஐ கடந்த வெப்பநிலை பதிவாகலாம். இது வட அமெரிக்காவில் இருந்து துருவ காற்று தெற்கே இறங்குவதால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் விளைவாகும். அதன் காரணமாக ஆப்பிரிக்காவின் வடபகுதியிலிருந்து சூடான காற்று மேற்கு ஐரோப்பாவுக்கு தள்ளப்பட்டு பிரான்சில் வெப்பம் அதிகரிக்கிறது.
சில இடங்களில் வெப்பநிலை பருவகால சராசரி வெப்பநிலையை விட 6°C முதல் 10°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வியாழக்கிழமையன்று தென் மேற்குப் பகுதிகளில் 25°C தாண்டும் வெப்பநிலை, சூரிய ஒளியுடன் சேர்ந்து 30°C-க்கு மேல் உணரப்படும் அளவுக்கு செல்லக்கூடும்.
பைரனீஸ் மலைப்பகுதிகளில் “foehn” எனப்படும் காற்று விளைவால் 27°C வரை உயர்வு நிகழலாம். இதுபோன்ற வெப்பம் பொதுவாக மே மாதம் அல்லது செப்டம்பர் மாதத்தில் மட்டுமே காணப்படும். சில நகரங்களில் இதுவரை இருந்த மாதச்சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால் நவம்பர் 14க்குப் பிறகு தென் மேற்கில் வெப்பநிலை சுமார் 5°C குறையலாம் என்றாலும், மற்ற பகுதிகளில் பருவத்திற்கு ஏற்றால் போல் இல்லாமல் அதிகமான வெப்பம் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan