Paristamil Navigation Paristamil advert login

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

9 கார்த்திகை 2025 ஞாயிறு 15:28 | பார்வைகள் : 140


உயர்தரப் பரீட்சை காலத்தில் அனர்த்தங்கள் காரணமாக ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மையமும் பரீட்சைத் திணைக்களமும் இணைந்து ஒரு சிறப்பு கூட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

எதிர்பாராத வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் காரணமாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இடையூறுகளைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

பரீட்சை காலத்தில் அனர்த்தமற்ற சூழலை உருவாக்க ஒவ்வொரு பங்குதாரர் நிறுவனமும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ளது.

அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சைக்குத் தோற்றும் திறன் பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் 117 தொலைபேசி எண்ணையோ அல்லது பரீட்சைத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 1911 தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்