Paristamil Navigation Paristamil advert login

தொடர்ச்சியாக 8 சிக்ஸர் - உலக சாதனை படைத்த ஆகாஷ் குமார்

தொடர்ச்சியாக 8 சிக்ஸர் - உலக சாதனை படைத்த ஆகாஷ் குமார்

9 கார்த்திகை 2025 ஞாயிறு 16:34 | பார்வைகள் : 118


தொடர்ச்சியாக 8 சிக்ஸர் அடித்ததுடன், அதிவேக அரைசதம் அடித்து ஆகாஷ் குமார் சாதனை படைத்துள்ளார்.

2025 ரஞ்சி கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா அணிகள் மோதியது.

இதில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட் இழப்பிற்கு 628 ஓட்டங்கள் குவித்தது.

இதில், 8 வது இடத்தில் களமிறங்கிய மேகாலயா வீரர் ஆகாஷ் குமார், தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் விளாசி, 11 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இது, முதல் தர கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதம் ஆகும்.

முதல் பந்து, ஓட்டங்கள் எதுவும் கிடைக்காமல், அடுத்து 2 ஒற்றை ஓட்டங்களை ஓடிய அவர், அடுத்த 8 பந்துகளில் 8 சிக்ஸர்களை அதிவேக அரைசதம் அடித்தார்.

முன்னதாக, 2012 ஆம் ஆண்டில், லீசெஸ்டர்ஷையரின் வெய்ன் வைட், 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே அதிவேக அரைசதமாக இருந்தது.  

தற்போது, ஆகாஷ் குமார் 11 பந்துகளில் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்