Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

10 கார்த்திகை 2025 திங்கள் 02:56 | பார்வைகள் : 158


ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டுக்கு உட்பட்ட ஹொன்சு தீவில் இவாதே மாகாணம் அமைந்த பகுதியில் கிழக்கு கடலோரத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

இவாதே மாகாணத்தின் கடற்கரையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் மாலை 5.12 மணியளவில் சுனாமி அலைகள் எழுந்தன.

அது விரைவில் கடற்கரையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 3 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்ப கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கையாக கடலோர பகுதியிலுள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. ஆனால், ஒனாகவா அணு உலைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்