Paristamil Navigation Paristamil advert login

6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்

6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்

10 கார்த்திகை 2025 திங்கள் 05:06 | பார்வைகள் : 120


பாகிஸ்தான் 6 வது முறையாக ஹாங்காங் சிக்ஸஸ் தொடரை வென்றுள்ளது.

2025 ஹாங்காங் சிக்ஸஸ்(Hong Kong Sixes) தொடரின் இறுதிப்போட்டி, பாகிஸ்தான் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.  

நாணய சுழற்சியில் வென்ற குவைத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக அணித்தலைவர் அப்பாஸ் அப்ரிடி, 11 பந்துகளில், 2 பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 52 ஓட்டங்கள் குவித்தார்.

தொடர்ந்து, 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குவைத் அணி, 5.1 ஓவர்களில், 6 விக்கெட்களையும் இழந்து, 92 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம், 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2025 ஹாங்காங் சிக்ஸஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடி தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

நேபாள வீரர் சந்தீப் ஜோரா 176 ஓட்டங்கள் எடுத்து தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக உள்ளார்.

நேபாள வீரர் ரஷீத் கான் 9 விக்கெட்களுடன் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரராக உள்ளார்.

பாகிஸ்தான் 6 வது முறையாக ஹாங்காங் சிக்ஸஸ் தொடரை வென்றுள்ளது.  

இந்த தொடரில் பாகிஸ்தானுடன் மட்டும் வெற்றி பெற்று, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய 3 சிறிய அணிகளிடம் ஹாட்ரிக் தோல்வியடைந்த இந்தியா புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்