பரிஸ் : மதுபானக்கடையில் ஆயுத முனையில் கொள்ளை!!
10 கார்த்திகை 2025 திங்கள் 08:37 | பார்வைகள் : 373
பரிசில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் ஆயுத முனையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
எட்டாம் வட்டாரத்தில் உள்ள Nicolas மதுபானக்கடையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 57 வயதுடைய ஒருவர், கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு கடையினை கொள்ளையிட்டுள்ளார். பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர் கைதும் செய்யப்பட்டார்.
கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் கொள்ளையிட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாற்பது வரையான காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டு, தொடருந்து நிலையம் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan