கர்ப்பகாலத்தில் பராசிட்டமால் பாவிப்பதால், ஆட்டிசம் ஆபத்தை ஏற்படுத்துமா?
10 கார்த்திகை 2025 திங்கள் 15:12 | பார்வைகள் : 516
கர்ப்ப காலத்தில் பராசிட்டமால் எடுத்துக்கொள்வது குழந்தைகளில் ஆட்டிசம் ஏற்படுத்தும் என்று கூறப்படும் கருத்துக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்று BMJ மருத்துவ இதழில் வெளியான ஒரு பெரிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கர்ப்பிணி பெண்கள் பராசிட்டமால் எடுத்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அபாயம் அதிகரிக்கும் என கூறியிருந்தாலும், இந்த ஆய்வு அந்த கூற்றை மறுக்கிறது. தற்போதுள்ள அறிவியல் தரவுகள், கர்ப்ப காலத்தில் பராசிட்டமால் எடுத்துக்கொள்வது மற்றும் ஆட்டிசம் அல்லது கவனக் குறைபாடு (ADHD) ஆகியவற்றுக்கு இடையே உறுதி செய்யப்பட்ட எந்த தொடர்பும் இல்லை என்பதை காட்டுகின்றன.
அறிவியல் சமூகமும் இதை வலியுறுத்தி, பராசிட்டமால் (அமெரிக்காவில் “டைலெனால்- Tylenol" என்ற பெயரில் விற்கப்படுகிறது) தான் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பான வலிநிவாரணி என்றும், அஸ்பிரின் (l'aspirine) மற்றும் ஐபுபுரோஃபேன் (l'ibuprofène) போன்ற மருந்துகள் கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்தானவை என்றும் தெரிவித்துள்ளது.
BMJ வெளியிட்ட ஆய்வு புதிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொள்ளாமல், இதுவரை கிடைத்த அனைத்து ஆய்வுகளையும் தொகுத்து, முழுமையான முடிவை வழங்குகிறது. பல முந்தைய ஆய்வுகள் குறைந்த தரத்தில் இருந்ததால், பராசிட்டமால் மற்றும் ஆட்டிசம் இடையே உறுதியான தொடர்பு இல்லை என்ற அறிவியல் ஒற்றுமையை இது மேலும் வலுப்படுத்துகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan