Paristamil Navigation Paristamil advert login

டில்லியில் கார் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு

டில்லியில் கார் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு

10 கார்த்திகை 2025 திங்கள் 16:00 | பார்வைகள் : 159


டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு மிக்க டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வது நுழைவு வாயில் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து டில்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

என்ஐஏ விரைவு


குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்