Paristamil Navigation Paristamil advert login

அஜித் ரஜினிக்கு விஜய் சேதுபதி வில்லன் ஆகிறாரா ?

 அஜித் ரஜினிக்கு விஜய் சேதுபதி வில்லன் ஆகிறாரா ?

10 கார்த்திகை 2025 திங்கள் 16:49 | பார்வைகள் : 235


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோ என்கிற இமேஜை மட்டுமே விரும்பாத விஜய் சேதுபதி, சவாலான குணசித்ர வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் ரூ.100 கோடியை எட்டியது.

இதன் காரணமாக இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் ரஜிகாந்த்தின் 173-ஆவது படத்திலும், அஜித்தின் அடுத்த படத்திலும் இவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒரு பக்கம் விஜய் சேதுபதி நடிப்பில் பிசியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் படு பிசியாக உள்ளார்.

குறிப்பாக கமல்ஹாசன் போல் சுற்றி வளைத்து, யாருக்கும் புரியாதது போல் பொடி வைத்து திட்டாமல்.... போட்டியாளர்களை வாரம் இரு நாட்கள் வெச்சு செய்து வருகிறார். எனவே பிக்பாஸ் ரசிகர்களும், வாரம் 5 நாட்கள் நிகழ்ச்சியை மிஸ் செய்தாலும் வார இறுதியில் விஜய் சேதுபதி வரும் அந்த இரண்டு நாட்களை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதி எதார்த்தமாக பேசியுள்ள ஒரு தகவல் அனைவருக்கும் பொருத்தும் விதத்தில் அமைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில், "பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என இருப்பதாக வரும் குற்றச்சாட்டு பற்றி தான் விஜய் சேதுபதி பேசினார்.... நான் ஆயிரங்களில் சம்பளம் பெரும் போது என்னுடைய கடனும் ஆயிரங்களில் இருந்தது. லட்சங்களில் சம்பாதிக்க துவங்கியதும் அதற்கு தகுந்த போல் கடன் இருந்தது. தற்போது கோடியில் சம்பாதிக்கிறேன்... ஆனாலும் அந்த பிரச்சனை மட்டும் என்னை துரத்தி கொண்டு தான் உள்ளது. அதனால் அதனுடனே வாழ கற்றுக்கொண்டேன் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்". இது அவருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்த கூடிய ஒரு தகவல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்