Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை

11 கார்த்திகை 2025 செவ்வாய் 10:20 | பார்வைகள் : 200


அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்' போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுவதாக பிரதமர் அந் தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ, பயன்படுத்தவோ தடை செய்கிறது.

இந்த நடைமுறை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்