Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாத சதித்திட்டம்! - சாலா அப்தெல்சலாமின் முன்னாள் காதலி கைது!

பயங்கரவாத சதித்திட்டம்! - சாலா அப்தெல்சலாமின் முன்னாள் காதலி கைது!

11 கார்த்திகை 2025 செவ்வாய் 10:55 | பார்வைகள் : 606


பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டு, பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமின் முன்னாள் காதலி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maëva B எனும் பெண் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று நவம்பர் 10 ஆம் திகதி முதல் தடுப்புச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அப்பெண் Hérault மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் நம்பர் 13 தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமின் முன்னாள் காதலி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் 13 தாக்குதலின் பத்தாவது ஆண்டு நினைவுநாள் நாளை மறுநாள் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில், ஏற்கனவே இரு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைகள் ஆம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்