Paristamil Navigation Paristamil advert login

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

11 கார்த்திகை 2025 செவ்வாய் 13:49 | பார்வைகள் : 228


 சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில் இந்த தகவல் புரளி என தெரியவந்துள்ளது.

சென்னையில் அண்மைக்காலமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருகிறது. அஜித்குமார் வீடு மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஈவிபி ஃபிலிம் சிட்டி, எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்