Paristamil Navigation Paristamil advert login

நவம்பர் 11 ஏன் தேசியநாள்?

நவம்பர் 11 ஏன் தேசியநாள்?

11 கார்த்திகை 2025 செவ்வாய் 19:23 | பார்வைகள் : 519


இன்று நவம்பர் 11, பிரான்சில் முதல் உலகப் போரில் போராடியவர்களுக்கும், அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது. 1918-ல் இன்றைய தேதியில் கையெழுத்தான முதலாம் உலக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 107-வது ஆண்டுவிழா இது.

வரலாற்று நிகழ்வு:

நவம்பர் 11, 1918 - முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நாள்

இந்த முதல் உலக மகா யுத்தத்தில் 18 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.

Rethondes (Oise) இல் ஜேர்மன் படைத்தரப்பும்   Compiègne  இல் பிரெஞ்சுத்தரப்பும் தங்கியிருந்தனர்.

கையெழுத்திடும் நிகழ்வு:

காலை 5:00: வெற்றி பெற்ற பகுதியில் பிரெஞ்சு தளபதி மரெசால் போக் (maréchal Foch) மற்றும் தோல்வியடைந்த பகுதியில் ஜேர்மன் பிரதிநிதிகளுமாக சந்திப்பு இடம் பெற்றது.

இரகசிய தொடருந்துப் பெட்டி உணவகத்தில் நடைபெற்ற  இச் சந்திப்பு பத்திரிகையாளர்களிடமிருந்து மறைக்கப்பட்டது

ஜெர்மனிக்கு கடுமையான 34 விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

கையெழுத்தான நேரம்: காலை 5:18

அமைதி ஒப்பந்தமான 'armistice" சைச்சாத்திடப்பட்ட 6 மணி நேரத்திற்குள் அதாவது 11 மணியளவில் வானிலும் தரையிலும் முற்றான போர் நிறுத்தம் ஏற்பட்டது.

10:59 இற்கு அமெரிக்க வீரர் ஹென்றி குந்தர் (Henry Gunther) இன் ஜேர்மன் இயந்திர துப்பாக்கிக்குப் பலியானதே முதலாம் உலகப் போரின் கடைசி சாவாக இருந்தது.

பிரெஞ்சுப் பகுதியில் பிரெஞ்சு வீரர் ஒகஸ்தன் த்ரேபுசோனின் (Augustin Trébuchon)  சாவே கடைசிச் சாவாக அமைந்தது.

அதிகாரப்பூர்வமாக நவம்பர் 11 அன்று யாரும் இறக்கவில்லை.

இந்த வரலாற்று நிகழ்வு, மனித வரலாற்றில் மிகவும் அழிவுகரமான போர்களில் ஒன்றின் முடிவைக் குறிக்கின்றது. பிரான்சில் இன்றும் இந்த நாள் தேசிய விடுமுறையாகக் கடைபிடிக்கப்படுகிறது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்