Paristamil Navigation Paristamil advert login

மூளைக்காக தினமும் ஓடுங்கள்

மூளைக்காக தினமும் ஓடுங்கள்

11 மாசி 2020 செவ்வாய் 11:19 | பார்வைகள் : 10030


 மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு குறுக்கெழுத்து, சுடோகு, புதிர் போன்ற விளையாட்டு பயிற்சிகள் உதவும். அவை மூளைக்கு சவால் விடும் விதத்தில் சிந்தனை திறனை தூண்டி விடும். வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளுக்கும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை இருக்கிறது. அதுதவிர வேறு சில எளிய பயிற்சிகளும் மூளைக்கு நலம் சேர்க்கும்.

 
* நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கருத்துப்படி, நடனத்தில் புதிய யுக்திகளை கற்றுக்கொள்வது மூளையின் செயல் திறனை மேம்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. அதுபோல் நினைவாற்றல் திறனும் கூடும்.
 
 
* ஜூம்போ, ஏரோபிக்ஸ் போன்ற நடன பயிற்சி முறைகள் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்யும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடல் எடையை குறைக்கவும், கட்டுடல் அழகை பராமரிக்கவும், உடல் சோர்வு இன்றி உத்வேகத்துடன் செயல்படவும் உடற்பயிற்சிகள் உதவும்.
 
* தியானம் செய்வதும் மூளைக்கு புத்துணர்வு அளிக்கும். எனினும் தியானத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும். மன நலன் சார்ந்த அத்தகைய பயிற்சிகள் மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும். தியானம் நினைவாற்றலை மேம்படுத்துவதோடு ஏராளமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் செய்தாலே மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
 
* சீன தற்காப்பு கலைகளில் ஒன்றான ‘தாய்சி’ எனும் பயிற்சியும் மூளைக்கு பலம் சேர்க்கும். குத்துச்சண்டைபோல் உடல் இயக்கங்களை கொண்டிருக்கும் இந்த பயிற்சிக்கு மூளையின் கட்டமைப்பில் மாற்றங்களை உருவாக்கும் தன்மை இருக்கிறது. அது மூளையின் அளவை அதிகரிக்கவும் உதவும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ‘தாய்சி’ மன ஆரோக்கியத்தையும் தரும்.
 
* சைக்கிள் ஓட்டுவது இதயத்திற்கு பலம் சேர்க்கும் உடற்பயிற்சியாகும். மூளையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் சைக்கிள் பயிற்சி உதவும். உடல் எடையை குறைக்கவும், உடல் வலு பெறவும் சைக்கிள் ஓட்டுவது சிறந்தது. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும் உதவி செய்யும். மன அழுத்தத்தை போக்கவும் செய்யும்.
 
* ஓட்டப்பயிற்சியும் மூளையின் ஆரோக்கியத் துடன் தொடர்புடையது. அது ஹிப்போகேம்பசில் புதிய செல்களை உருவாக்குவதற்கு உதவும். மன அழுத்தத்தை போக்கவும், உடல் எடையை குறைக்கவும் ஓட்டப்பயிற்சி கைகொடுக்கும். மூளையின் நலனை பேணுவதற்கு தினமும் கொஞ்ச தூரமாவது ஓடுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்