இந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்
20 தை 2020 திங்கள் 11:58 | பார்வைகள் : 9365
புற்று நோய் என்றாலே அச்சம் அதிகமாகி விடுகின்றது. மருத்துவ உலகில் இந்நோய்க்கு பிரமாண்ட முன்னேற்றங்கள் வந்துள்ளன. இருப்பினும் சில அறிகுறிகளின் வெளிப்பாடுகளுக்கு உடனடியாக மருத்துவ கவனம் கொடுப்பது நம்மை மேலும் பாதுகாப்பாக வைக்கும். தொண்டையின் இரு புறமும் ஏதோ உருண்டை போல் இருந்தால் சோதித்துக் கொள்ள வேண்டும். மேலும் மது, புகை பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் மிகக் கூடுதல் கவனம் அளிக்க வேண்டும்.
மஞ்சள் காமாலை தாக்குதல் இருந்தால் நாட்டு வைத்தியம் என்று இருந்து விடாமல் உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
* மரு, மச்சம் இவற்றில் நிற, உரு மாற்றம் இருந்தால்....
* அடிக்கடி (அல்லது) தொடர்ந்து வயிற்று வலி இருந்தால்....
* அடிக்கடி வயிறு உப்பிசம்.....
* தொடர்ந்து தலைவலி....
* வார்த்தைகளை உருவாக்குவதில் சிரமம்.....
* முறையற்ற ரத்தப் போக்கு பெண் பிறப்புறுப்பிலிருந்து....
* ஆண் பிறப்புறுப்பில் வலியற்ற கட்டி...
* அதிக சோர்வு, பலமின்மை....
* நீண்ட கால இருமல்....
* 3 வாரங்களுக்கு மேல் இருந்தாலே அது நீண்ட காலம்தான்
* புதிதாக நகத்தில் கறுப்பு
* சிறுநீரில் ரத்தம்
* மாறுபட்ட நேரங்களில் கழிவுப் பொருள் வெளியேற்றம்...
புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்
* கண் பார்வையில் திடீரென கோளாறு
* மூச்சு வாங்குதல்
* முயற்சி எடுக்காமலேயே எடை குறைதல்
* பசியின்மை
* தொடர்ந்து தொண்டை பாதிப்பு
* குரலில் மாற்றம்
* தீராத முதுகு வலி
* மார்பகத்திலிருந்து கசிவு
* அடிக்கடி ஜுரம்
* வாயில் தொடர்ந்து ஆறாத புண்
* விழுங்குவதில் கடினம்
ஆகிய அறிகுறிகள் இருந்தால் கவனம் கொடுத்து மருத்துவத் ஆலோசனை பெறுவது சிறந்த நோய் தவிர்ப்பு முறையாக அமையும்.
வயது கூடும்பொழுது நமது உடல் நலம் எப்போதும் போல இருப்பதில்லை. நமது தசைகள் அந்த அளவு உறுதியாய் இருப்பதில்லை. தளர்ந்து விடுகின்றன. மூட்டுக்களின் அசைவுகள் சற்று இறுகி விடுகின்றன. இந்த கால நாகரீக உணவு வகைகள் உடலுக்கு வீக்கத்தினை தருவதாகவே இருக்கின்றன. மனதை விட உடலுக்கு எளிதில் வயது கூடி விடுகின்றது. அதிலும் குறிப்பாக மூட்டு வீக்கங்கள் அதோடு தொடர்புடைய மற்றும் சில மூட்டு பாதிப்புகளின் வீக்கங்கள் இவை அதிக பாதிப்பினை ஏற்படுகின்றன.
சிவந்து விடுதல், மூட்டுகளில் வலி, மூட்டுகள் இயங்குவதில் கடினம் ஆகியவை ஏற்படுகின்றன. வீக்கம் என்பது கிருமிகளை அழிக்கும் ஒரு எதிர்ப்பு முறை என்றாலும் அதிக வீக்கம் என்பது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதே. பல நோய்களின் அடிப்படை மூலமே அதிக வீக்கம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
தூக்கமின்மை, அதிக மன உளைச்சல், உடலில் நீர் சத்து பற்றாமை, புகை பிடித்தல், மது, உணவுப் பாதையில் கெட்ட பாக்டீரியா இவையே உடலினுள் வீக்கத்தினை ஏற்படுத்துகின்றன.