Paristamil Navigation Paristamil advert login

பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - 37 பேர் பலி

பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - 37 பேர் பலி

13 கார்த்திகை 2025 வியாழன் 07:25 | பார்வைகள் : 220


பெரு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லாத சாலைகள், உரிய எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமை ஆகியவற்றால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

இந்நிலையில், பெரு நாட்டை சிலி நாட்டுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் சரக்கு வேன் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

லாமோசாஸ் என்ற நிறுவனத்தின் பேருந்து காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்தில் இருந்து அரேக்விபா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது.

அதில் மொத்தம் 60 பேர் இருந்தனர். வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்றின் மீது பேருந்து மோதியது.

மோதிய வேகத்தில் 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு விழுந்தது.

சம்பவ இடத்திலேயே 37 பேர் பலியாகினர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். மீட்புப் பணிகளில் இறங்கிய அவர்கள் இடிபாடுகளில் இருந்த 37 சடலங்களை மீட்டனர்.

படுகாயம் அடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்