Paristamil Navigation Paristamil advert login

WBBLயில் சதமடித்த மூனி! சொதப்பிய ஜெமிமா ரோட்ரிகஸ்

WBBLயில் சதமடித்த மூனி! சொதப்பிய ஜெமிமா ரோட்ரிகஸ்

13 கார்த்திகை 2025 வியாழன் 12:20 | பார்வைகள் : 119


மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது.

 

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதிய பிக் பாஷ் போட்டி ஆலன் பார்டர் பீல்ட் மைதானத்தில் நடந்தது.

 

முதலில் ஆடிய பெர்த் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய பெத் மூனி (Beth Mooney) 73 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி 19.1 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி பெற்றது.

 

அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 46 (30) ஓட்டங்களும், சினேல்லே ஹென்றி 39 (23) ஓட்டங்களும் விளாசினர். இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) 11 ஓட்டங்களில் அவுட் ஆகி சொதப்பினார்.

 

க்ளோ ஐன்ஸ்ஒர்த், சோபி டிவைன் தலா 2 விக்கெட்டுகளும், எபோனி மற்றும் எமி எட்கர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். சதம் விளாசிய பெத் மூனி ஆட்டநாயகி விருது பெற்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்